நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் மீட்கப்பட்ட சடலம்! நடந்தது என்ன?

0
159
Actor Vijay ( A still from Sarkar movie)

நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் மீட்கப்பட்ட சடலம்! நடந்தது என்ன?

விஜய்கென்று நற்பணி மன்றம் உள்ளது  அதில் ஒன்றான சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அலுவலகமும் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புஸ்ஸிஆனந்த் தலைமையில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அந்த அலுவலகமானது  சீரற்று காணப்பட்ட நிலையில் மேலும் அந்த அலுவலகத்தை புணர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்பணியில் 10க்கும் மேற்பட்ட வேலை ஆட்கள் வேலை செய்து வந்தார்கள். அதில் ஒருவர்தான் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன்(34). இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறார்.இவர் மது பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு சில தினங்கள் வீட்டற்குச்செல்லாமல்  அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்வார். அப்போது சனிக்கிழமையன்று சம்பள பணத்தை பெற்று கொண்டு வீட்டிற்கு சென்றார்.இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பினார்.

அன்று இரவு அவர் மது அருந்தியிருந்தார். அப்போது அவர் தனது மேஸ்திரியர்ரிடம் சாப்பிடுவதற்காக  ரூ.100 வாங்கிக்கொண்டு சென்று பரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டார். அப்போது திடீர் என்று அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்தார்.

அந்நிலையில் அவர் அருகில் ஒருவரும் இல்லாத நிலையில் அவர் இறந்துவிட்டார். சக உழியர்கள் காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது அவர் கையில் பாதி பாரோட்டவும் வாயில் பாதி பரோட்டவுடன் கீழே கிடந்தார்.

அதனை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு போலிசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உணவு குடலில் அடைப்பு ஏற்பட்டுதான் இறந்திருக்க வேண்டும் என்று அக்கம்பக்கதினர் பேசிவருகின்றார்கள்.

சடலத்தை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்றும் கூறுகிறார்கள்.

Previous articleஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும்! இத்தனை லட்சம் கடன் பெறலாம்! வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
Next article  சிறுமியிடம் கைவரிசையை  காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!