மொத்தமாக வெளியேறும் வீரர்கள்! ஐபிஎல் முடிவுகளை மாற்றும் பாகிஸ்தான்!

Photo of author

By Vijay

டி20 உலக கோப்பை தொடருக்கான தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் வீரர்கள் பட்டியல் நாளுக்கு நாள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கிறது.

அண்மையில் டி20 உலக கோப்பை தொடர்பான இங்கிலாந்து அணிகள் அணியின் வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில், ஜாஸ் பட்லர், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த உலகக் கோப்பை தொடர் முடியும் முன்னதாகவே இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளது உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளதால், இந்த தொடரில் பங்கேற்கும் வகையில் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறி இங்கிலாந்து வீரர்கள் புறப்படுவார்கள் என்று, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் தொடரிலிருந்து விலகி தங்களது தாய் நாட்டுக்கு திரும்புவார்கள் என்பது உறுதியாகி இருப்பதால், இது ஐபிஎல் தொடரின் அரைகுறதிலும், இறுதி ஆட்டத்திலும் அணிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.