சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!!

Photo of author

By CineDesk

சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உருதிசெய்யப்பட்டதாக சுகாதரத் துறை அறிவிப்பு. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,17,87,534 லிருந்து 1,1846,,652 ஆக உயர்வு என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மற்றும் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 257 பேர் பலி. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 1,60,692 லிருந்து 1,60,949 ஆக உயர்த்து உள்ளது. மேலும் இந்தியாவில் ஒரே நாளில் 32,987 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைத்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,12,31,650 லிருந்து 1,12,64,637 ஆக உயர்வு. நாடு முழுவதும் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 4,21,066 ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளவர்கள் விகிதம் 95.09% மற்றும் இறந்தவர்கள் விகிதம் 1.36% ஆகா உயர்வு. இந்தியாவில் ஒரே நாளில் 11 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 23.66 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.