India Pakistan War: 1960 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை போடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இந்திய வங்கியால் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருக்கும் பியாஸ், ரவி, சாட்லேஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் 30 சதவீதம் நீரானது இந்தியாவுக்கும் 70% பாகிஸ்தானுக்கும் கிடைத்து வந்தது. இதில் மேற்கு நதிகளான சிந்து செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
தற்போது நடைபெற்ற காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலால் மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. இதனால் செனாப் பகுதிக்கு செல்ல வேண்டிய நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடம் முழுவதும் நீரில்லாமல் வற்றி காணப்படுகிறது. இனிவரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு நீர் தேவை அதிகரித்து நெருக்கடி ஏற்படும். அதேபோல பாகிஸ்தானின் ராணுவமும் அங்கிருக்கும் பயங்கரவாதிகளும் ஒருவருடன் ஒருவர் இணைந்து தான் இருப்பர்.
இருவருக்குள்ளும் வேறுபாட்டை பார்க்க முடியாது. அந்த வகையில், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததும் பாகிஸ்தானின் தீவிரவாதி சையத், நீங்கள் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் பாதிப்பை சந்திக்க மாட்டோம், இந்தியா தான் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியர்கள், உயிரைக் கூட விட நேரிடலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தீவிரவாதி போலவே தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன் டைரக்டர் ஜெனரல் லிப்டினென்ட், இதே போலவே தற்பொழுது இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீங்கள் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால், உங்கள் மூச்சை நிறுத்தி விடுவோம் என்று காட்டமாக பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய அந்த வீடியோ பெருமளவு வைரலாகி வருவதுடன் இந்தியர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவர் அவ்வாறு பேசியதற்கு தற்பொழுது உலக நாடுகள் மத்தியில் கவனம் ஏதும் பெறவில்லை.