இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு 

Photo of author

By Anand

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு

சமீபத்தில் சீனாவிடமிருந்து ஆளில்லா பறக்கும் விமானமான ட்ரோனை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.இந்த ட்ரோன் மூலமாக இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவி வெடிப்பொருட்களை வீச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையறிந்த இந்திய உளவுத்துறை இந்திய பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை அளித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படைகளும் தயாராக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதாவது ஆளில்லா விமானங்கள் இந்திய எல்லையில் பறந்தால் அதை சுட்டு வீழ்த்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் அபுதாபியில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு பின்னர் அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாகவே உள்ளனர் .

அந்த வகையில் இந்திய பாதுகாப்பு படையினரும் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றனர் .