பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இயக்கி வருகின்றது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு! 

Photo of author

By Sakthi

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இயக்கி வருகின்றது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பின்னால் நின்று இயக்கி வருகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று அதாவது ஜூலை 26ம் தேதி நாட்டின் பல பகுதிகளில் கார்கில் போர் வெற்றி கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதாவது 1999ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தான் முயற்சியை தகர்த்து எறிந்தது. மேலும் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போரில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கார்கில் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்று(ஜூலை26) 25வது கார்கில் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் நகரில் இரண்டு தினங்களுக்கு முன்னரே கார்கில் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது. இதையடுத்து இன்று(ஜூலை26) காலை 9.20 மணியளவில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் நகருக்கு வந்தார்.
பின்னர் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இது குறித்து மக்களின் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “கார்கில் போரில் இந்தியாவுக்காக உயிரிழந்த ஒவ்வொரு வீரருக்கும் இந்தியா தலை வணங்குகின்றது. தீய எண்ணங்களுடன் இந்தியாவை யார் நெருங்கினாலும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவார்கள். நம்முடைய நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் நாம் அனைவரும் கடமை பட்டிருக்கின்றோம்.
இன்றும் இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகமாக தாக்குதல் நடத்துகின்றது. ஆனால் பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது. பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்.
பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் தூண்டிவிடுபவர்களின் எண்ணம் ஒருபோதும் பழிக்காது என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். பாகிஸ்தான் தான் பயங்கரவாதிகளை பின்னால் நின்று இயக்கி வருகின்றது” என்று பேசினார்.