வாரிசு படம் பற்றிய உண்மையை கூறிய குஷ்பு! இது தான் அந்த காட்சிகளை நீக்க காரணமா? 

0
216
Khushbu told the truth about Varis film! Is this the reason for deleting those scenes?
Khushbu told the truth about Varis film! Is this the reason for deleting those scenes?
வாரிசு படம் பற்றிய உண்மையை கூறிய குஷ்பு! இது தான் அந்த காட்சிகளை நீக்க காரணமா?
வாரிசு திரைப்படத்தில் தான். நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை நடிகை குஷ்பு அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இந்த திரைப்படத்தை தில் ராஜு அவர்கள் தயாரித்திருந்தார். மேலும் தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷியாம், ஸ்ரீகாந்த், பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த திரைப்படத்தில் நடிகை குஷ்பு அவர்களும் நடித்திருந்தார். நடிகை குஷ்பு வாரிசு திரைப்படத்தில் இருப்பது போல புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடித்த காட்சிகள் எதுவும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து படக்குழு குஷ்பு நடித்த காட்சிகளை நீக்கியதற்கான காரணங்களை கூறினர். மேலும் நடிகை குஷ்பு நடித்த காட்சிகள் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுக்காக(Deleted Scene) வெளியாகும் வீடியோவில் வரும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை அது போல எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை நடிகை குஷ்பு அவர்கள் கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை குஷ்பு அவர்கள் “வாரிசு திரைப்படத்தில் நானும் நடித்தேன். எனக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் இரண்டு பேருக்கும் இடையில் ஒரு உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் இருந்தது.
நான் மற்றும் நடிகர் விஜய் இணைந்து நடித்த இந்த காட்சிகள் திரைப்படத்தின் இறுதியில் குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கும் வகையில் இருந்தது. நான் நடித்த காட்சிகள் முழுவதும் நடிகர் விஜய் அவர்களுடன் மட்டும் தான். வேறு யாருடனும் எனக்கு காட்சிகள் இல்லை.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் நான் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டது. அதற்கு காரணம் உண்மையாகவே படத்தின் நீளம் தான். இயக்குநர் வம்சி அவர்கள் ஒருநாள் நேரில் வந்து என்னை பார்த்து பேசினார். அப்பொழுது வம்சி அவர்கள் என்னிடம் ‘வாரிசு திரைப்படத்தில் நீங்கள் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் நீக்க வேண்டும்’ என்று கூறினார்.
அதற்கு நான் அப்படியென்றால் நான் நடித்த ஒரு காட்சி கூட இருக்கக் கூடாது என்று கூறினேன். நானும் நடிகர் விஜய் அவர்களும் நடித்த காட்சிகள் முன்பு கூறியது போலவே மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும். அந்த காட்சிகள் படமாக்கும் பொழுது நாங்கள் இரண்டு பேரும் உண்மையாகவே அழுதுவிட்டோம்.
வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகர் விஜய் என்னை சந்தித்து பேசினார். நானும் நடிகர் விஜய்யும் அப்பொழுது படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசினோம். நான் நடித்த காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டதற்கு வருத்தமும் தெரிவித்தார்” என்று கூறினார்.
நடிகை குஷ்பு மற்றும் நடிகர் விஜய் இருவரும் இதற்கு முன்னர் 1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதையடுத்து 2009ம் ஆண்டு வெளியான வில்லு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.