கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளார். மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நர்வானி அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது;
‘உலக மக்களை கொரோனா வைரஸில் இருந்து காப்பாற்ற இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்து வரும் வேளையில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவில் நோய் தொற்று ஏற்படுத்துவதற்காக ஊடுருவியுள்ளனர்.
இந்திய உளவுத்துறை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டபோது அவர்களின் இந்த சதித் திட்டம் தெரியவந்துள்ளது. இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்று கூறினார்.