ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா!!

0
264
#image_title
ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா!
இந்த வருடத்திற்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை ஆசிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுக்ககூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முன்னர் பாகிஸ்தான் நாட்டில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் சில ஆசிய நாடுகளின் எதிர்ப்பாலும் வெயிலின் காரணமாகவும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை நாட்டிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சில தினங்களுக்கு முன்னர் ஆசியநாடுகளின் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியானது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வேறு நாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், குறைந்தது முதல் சுற்றின் நான்கு போட்டிகளையாவது தங்களது நாட்டில் நடத்துவதற்கு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரை வேறு நாட்டில் நடத்துவது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் தலைவர் நஜாம், “ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் 4 போட்டிகளையாவது தங்கள் நாட்டில் நடத்த வேண்டும். இல்லையேல் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெறியேறும்” என்று கூறியுள்ளார்.
Previous articleசர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!
Next articleஇது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!!