இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!!

0
134
#image_title
இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!
பல சர்ச்சைகளுக்கு உள்ளான திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக இது தான் உண்மையான கேரளாவின் கதை என்று கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, யோஹிதா பிலானி, சோனியா பிலானி, சித்தி இட்னானி நடிப்பில் கடந்த மே மாதம் 5ம் தேதி வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் பாஜக கட்சியினர் மட்டும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் அவர்கள் ‘இது தான் உண்மையான கேரளா கதை’ என்ற தலைப்பின் கீழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் அவர்கள், “2020ம் ஆண்டில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவிற்கு ரூபாய் 2.3 லட்சம் கோடிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
கேரளா மாநிலத்தின் தனிநபர் வருமானம் 60 சதவீதம் அதிகம். 0.71 சதவீதம் மக்கள் மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். கேரளா மாநிலத்தில் கல்வியறிவு 96 சதவீதமாக உள்ளது. பிரசவத்தின் பொழுது தாய் மற்றும் சிசு இறப்பில் 1000க்கு 6 பேர் மட்டுமே” என்று அவர் கூறியுள்ளார். தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.