பாகிஸ்தான் ராணுவம் இத்தனை முறை அத்துமீறி தாக்குதல் !! நாடாளுமன்ற அறிக்கை

0
210

எல்லைப் பகுதியான காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவர தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 9 மாதமாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மீறி 3,186 முறை இந்திய ராணுவ மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7- ஆம் தேதி வரை உள்ள இடை காலகட்டத்தில் 778 கிலோ மீட்டர் தூரம் கொண்ட எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவமானது 3,186முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் ,அதே போல் 198 கிலோ மீட்டர் தூரம் உள்ள சர்வதேச எல்லைப் பகுதிகளிலும் 242 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஒவ்வொரு மாதமும் பாகிஸ்தான் ராணுவமானது , 350 முதல் 400 முறை அத்துமீறி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ராணுவ ஆவணங்களின்படி 2017-ல் 971 முறையும், 2018-ல் 1, 629 முறையும், 2019-ல் 3,168 முறையும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுதொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,சீனாவை எப்போதும் ஆதரிக்கவே பாகிஸ்தான் விருப்பமும் என்று கூறியுள்ளார். மேலும் பனிக்காலம் தூங்குவதற்கு முன்னர் காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் வைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வந்துள்ளதை இராணுவ அதிகாரி தெரிவித்தார்.

மேலும் சீன ராணுவம் லடாக் கிழக்குப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும் இந்தியாவிற்கு ராணுவ வீரர்கள் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பீரங்கிகள், டாங்கிகள் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாகிஸ்தானை ஒட்டிக்கொள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் குறைக்க படாமல், இந்திய ராணுவம் அதிக அளவில் ராணுவ வீரர்களை குவிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க துரிதப் படுத்தப் பட்டுள்ளது.

Previous articleபாதுகாப்பு கட்டமைப்பை குறித்த (TRAI) வெளியிட்ட புதிய அறிவிப்பு !!!
Next articleகிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here