இந்திய அணியை நாங்களும் எளிதாக வீழ்த்துவோம்!! ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரர்!!

0
115
Pakistani player who pissed off the fans
Pakistani player who pissed off the fans

CRICKET: இந்திய அணி தோல்விக்கு பிறகு இந்திய அணியை நாங்களும் வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அகரம்  இந்திய அணியின் ரசிகர்களை  சீண்டியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும், பாகிஸ்தான் அணியும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது தற்போது மிக பெரிய பேசு பொருளாகி உள்ளது.

இந்த தோல்வி குறித்து பலரும் பல வகையான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் அணியின் முக்கிய மூத்த வீரர்கள் சரியாக பேட்டிங் செய்ய வில்லை என்றும், போட்டி தொடங்கும் முன் சரியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை மேலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர் நாங்கள் இந்திய அணியை வீழ்த்துவோம், இவ்விரு அணிகளுக்கும் நடக்கும் போட்டியை காண ஆர்வமாக இருக்கிறேன். என்று கூறியது இந்திய ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. ஆனால் இந்திய அணி நியூசிலாந்து உடனான தோல்வியால்  ரசிகர்கள் எதுவும் பேச முடியாத நிலையில் உள்ளனர்

Previous articleDMK: உதயநிதி இப்படி செய்தது கட்டாயம் சட்ட விரோதம்.. உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு!!
Next articleஅரசின் அதிரடி!!சைக்கிள் ஓட்டும் போது போன் பேசினால் சிறை!!