கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார்

Photo of author

By Anand

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார்

ரகசிய அறை அமைத்து காரிமங்கலம் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2-டன் குட்காவை காரிமங்கலம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

பெங்களூர் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் கடத்துவதாக தர்மபுரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் காரிமங்கலம் சோதனை சாவடியில் போலீசார் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் இந்த சோதனையில் கண்டெய்னர் லாரி டிஸ்யூ பேப்பர் மூட்டைகளுடன் வந்ததை மடக்கி பிடித்தனர். பின்னர் நடத்திய சோதனையில் லாரியில் ரகசிய அறை அமைத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் இருப்பது தெரிய வந்தது. அதில் மூட்டை மூட்டையாகவும், பெட்டியாகவும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருப்பதை கண்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் அடங்கிய 150 மூட்டைகளில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான 2-டன் குட்கா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.