பழனி மலை முருகன் சிலை சுரண்டப்பட்ட விவகாரம்.. 3 மணி நேரம் ஆய்வு!! கொந்தளிப்பில் பொதுமக்கள்!!

0
103
Palani Hill Murugan idol exploitation issue.. 3 hours investigation!! Public in turmoil!!
Palani Hill Murugan idol exploitation issue.. 3 hours investigation!! Public in turmoil!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள முருகன் சிலையானது போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த நவபாஷன சிலையானது 9 அறிய வகை மூலிகைகள் கொண்டு தயாரித்துள்ளனர். இது செவ்வாய் ஆதிக்கம் உள்ள இடத்தில் இருக்க வேண்டும் என்பதால் போகர் பழனி மலையை தேர்வு செய்து அங்கு வைத்து வழிபட ஆரம்பித்தார். காலப்போக்கில் இச்சிலையின் மகத்துவம் அறிந்து பலரும் இதில் உள்ளவற்றை ஆராய வேண்டும் என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே சிலையை மாற்றம் செய்தனர்.

இந்த விவகாரம் பூகாம்பரமாக வெடிக்க தொடங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டதின் பெயரில் மீண்டும் சிலை கொண்டுவரப்பட்டது. இவ்வாறு இருக்கையில் முருகனின் பின்புறத்தினை அதிக அளவு சோதனைக்கென்று சுரண்டப்பட்டதாக பல தகவல்கள் வெளியானது. இதனின் உண்மை தன்மை அறியும் வகையில் இதற்கென்று உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஓய்வு பெற்ற நீதிபதி கொங்கியப்பன் தலைமையில் இது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைத்துள்ளனர்.

இந்த குழு திடீரென்று நேற்று பழனி மலைக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மாறாக காத்திருக்கும் சூழல் உண்டானது. இதில் ஐஐடி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டமையால் இந்த சோதனையில் ஏதேனும் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதேபோல கடந்த முறை ஆய்வு நடத்திய பொழுது அதற்குரிய அறிக்கையை வெளிப்படையாக கூறிய பொழுது இம்முறை ஏன் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நவபாஷாண சிலை மனிதர்கள் போல் இரவு நேரத்தில் வேர்க்கும் தன்மை கொண்டது, இதனால் இரவு முழுவதும் சந்தன அலங்காரத்தில் முருகர் வீற்றிருப்பார். மேலும் அந்த தண்ணீர் சந்தனம் உள்ளிட்டவை அதிகப்படியான மருத்துவ குணம் சார்ந்தது எனக் கூறுகின்றனர். இது குறித்து ஆராய்வதற்கு என்று பல தரப்பினர் முயன்றுள்ளனர். அவ்வாறு முயன்றதில் சிலை ஏதேனும் சேதம் ஆகியுள்ளதா என்பதை கண்டறிய தான் இந்த குழு நிறுவப்பட்டது. ஆனால் இவர்கள் ஏதும் வெளிப்படையாக சொல்லாதது குறித்து மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Previous articleபேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இவ்வாறு செய்தால் வருமானவரித்துறை இடமிருந்து விலக்கு பெறலாம்!!
Next articleவாயை பிளந்த ஆஸ்திரேலியா ..சிராஜ் செய்த மொரட்டு சம்பவம்!! சாதனை க்கு பதிலாக வந்த சோதனை!!