பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பழனி முருகன் கோவில் இணைஆணையர் நடராஜன் கூறுகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை கோவில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் அறநிலையத் துறை இணையதளமான www.hrce.tn.gov.in ல் நேற்று முதல் 20 ஆம் தேதி வரை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் முன்பதிவு செய்ய பான் கார்டு,ஆதார் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை,பாஸ்போர்ட்,வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம்,ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சரிபார்க்க வேண்டும்.
போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அதில் குறிப்பிடுவது அவசியம்.அதனை தொடர்ந்து ஜனவரி 21 ஆம் தேதிக்கு பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2000 பக்தர்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் போன் நம்பருக்கு தகவல் அனுப்பப்படும்.
அதன்பிறகு ஜனவரி 23 மற்றும் 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாள சான்று நகலுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வேலவன் விடுதிக்கு சென்று இலவச அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.