அமமுக துணை பொதுச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு!

Photo of author

By Parthipan K

அமமுக துணை பொதுச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு!

Parthipan K

அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுச் செயலாளருமான பழனியப்பனுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இரண்டு நாட்களுக்கு (செப். 28) முன்பு ராயபேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.