Palli Vilum Palan : பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா??

0
569
#image_title

Palli Vilum Palan : பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா??

ஆன்மீகத்தின் அடிப்படையில் மனிதர்களின் மீது பல்லி விழுந்தால் அதற்கேற்ற வகையில் பலன்(Palli Vilum Palankal in Tamil) கூறப்படும். அந்த காலத்தில் பல்லி விழும் பலனை பார்க்கும் முறையை கௌரி சாஸ்திரம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக ஜாதகத்தின் அடிப்படையில் பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. இந்த கேது ஸ்வரபானு என்ற அசுரனின் உடலாகும். அந்தவகையில் இறைவன் மனிதர்களுடன் பேச இந்த பல்லியை பயன்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

நமது முன்னோர்கள் மற்றும் இறைவன் பல்லி வடிவத்தில் நமது வீட்டில் இருப்பதாகவும் கூறப்படும். அதன் அடிப்படையில் தான் முக்கிய விவகாரங்கள் பேசும் போது பல்லி சத்தம் போடுவதை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்து வருகிறது.

இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் நல்லது கேட்டது பார்த்து சரியான முடிவுகளை எடுக்க இந்த பல்லி சகுனம் பார்க்கும் வழக்கம் இன்னும் பெரும்பாலான வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதே போல பல்லி நமது உடலில் எந்த பாகத்தின் மீது விழுகிறது என்பதை வைத்தும் அதற்கான பலன்கள்(Palli Vilum Palan) கூறப்படுவதுண்டு. அந்தவகையில் நம் உடலில் பல்லி எந்தெந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் காணலாம்.

பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள்: Palli vilum Palangal in Tamil 2024

* பல்லி நம் தலையில் விழாமல் தலை முடியில் விழுந்தால் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மை கிடைக்கப் போகிறது என்பது அர்த்தம்.

* பல்லி நமது முகத்தில் விழுந்தால் நமது வீட்டிற்கு சொந்தக்காரர்கள் அதாவது உறவினர்கள் வருவார்கள்.

* புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு உதவி கிடைக்கும்.

* கண்ணத்தில் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள் அல்லது தண்டிக்கப்படுவீர்கள்.

* இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவது நீங்கள் மகிழிச்சியில் இருப்பீர்கள்.

* வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.

* பாதத்தில் பல்லி விழுந்தால் விரைவில் நீங்கள் வெளிநாடு பயணம் செல்வீர்கள்.

* தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை மதிப்பு மிக்க வையங்கள் இரத்தின கற்கள் போன்ற பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும்.

* தொடையில் பல்லி விழுந்தால் உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்

* இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகமும், வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபமும் கிடைக்கும்.

* கழுத்துப் பகுதியின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

* கழுத்துப் பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் வேறு ஒருவருடன் பகை உண்டாகும்.