Palm Fruit in Tamil: கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.. பலன் தரும் பனம்பழம்..!!

Photo of author

By Priya

Palm Fruit in Tamil: பூலோகத்தின் கற்பவிருட்சம் என்று அழைக்கப்படுவது பனை மரம். இந்த மரத்தில் வேர் முதல் நுனி வரை அனைத்தும் உதவும். சுமார் 20 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை வளரும் இந்த பனை மரம். தமிழகத்தின் மாநில மரமாகவும், தமிழர்களின் வாழ்வியலில் ஒன்றி போன மரமாகவும் இந்த பனை மரத்தை நாம் காணலாம். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த பனை மரம்.

இந்த பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடியது தான் பனம்பழம். இந்த பனம்பழம் ஒரு சீசன் பழமாகும். இந்த பழம் ஆடி மாதம் வரை கிடைக்கும் பழமாகும். கோடை மாதத்தில் அனைவரும் குளிர்ச்சியான, தண்ணீர்சத்து நிறைந்த பழங்களை தான் அதிகம் வாங்கி உண்பார்கள். அந்த வகையில் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் நுங்கு வாங்கி சாப்பிடவும் மக்கள் தவறுவதில்லை. ஏனென்றால் நுங்கு குளிர்ச்சி மிகுந்த பழம் (panampazham) என்பதால்.

அந்தவகையில்  பனம்பழம் அதிகமானவர்கள் தேடி பார்த்து வாங்கி சாப்பிடுவதில்லை. இந்த பழம் கிடைப்பது என்பது அரிதானது. மேலும் கிராமப்புறங்களில் கிடைக்கும். இந்தக்கால தலைமுறைகளுக்கு இந்த பனம்பழம் என்ன என்பது கூட தெரியாது. நமது தாத்தா, பாட்டியிடம் கேட்டால் பனம்பழத்தின் நன்மைகளை கூறுவார்கள். நாம் இந்த பதிவில் பனம்பழத்தின் நன்மைகள் மற்றும் அதில் சத்துக்களை காண்போம்.

பனம்பழத்தில் உள்ள சத்துக்கள் – Nutrients in palm fruit in Tamil

பனை பழங்களில் வைட்டமின்கள் பி மற்றும் சி, தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் இரும்பு, கார்போஹைட்ரேட், கொழுப்பு,துத்தநாகம், ரிபோஃப்ளேவின் தயாமின், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைய உள்ளன. மேலும் இதில் நீர்ச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

பனம்பழத்தின் நன்மைகள் – benefits of palm fruit in Tamil?

இந்த பழம் சாப்பிட்டால் பல்வேறு நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது. அதில் முதலாவதாக மலச்சிக்கலை நீக்குகிறது. பொதுவாக மலச்சிக்கலுக்கு நார்ச்சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும். அந்த வகையில் பனம்பழத்தில் உள்ள நார்சத்து உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது.

மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளதால் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது.

இந்த பனம்பழம் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. மேலும் வாந்தி, குமட்டல், மன அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த பழத்தின் சாறை முகத்தில் தடவி வந்தால் சரும நோய்க்கு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. இந்த பழத்துடன் சிறது வெல்லம் சேர்த்து உண்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட கழிவுகளை நீக்குகிறது.

யாரெல்லாம் பனம்பழம் சாப்பிடலாம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை உண்ணலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பெரியவர்கள் பழத்தை கவனமாக சாப்பிட கொடுக்க வேண்டும். நீரிலிவு நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், அலர்ஜி உள்ளவர்கள் இதனை தவிர்த்துக்கொள்ளலாம். இவர்கள் மருத்துவர்கள் அனுமதி பெற்று உண்ணலாம்.

பனம்பழத்தின் தீமைகள் – side effects of palm fruit in Tamil?

இந்த பனம்பழம் சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவும் வராது. மேலும் அளவுடன் சாப்பிடும் எந்த பொருளும் நல்லது. அந்த வகையில் பனம்பழத்தினால் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.

இதில் மாவு சத்து அதிகமாக இருப்பதால் சிலருக்கு வயிற்று கோளாறு ஏற்படலாம். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகள் கவனமாக சாப்பிட வேண்டும்.

பனம்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் 

பனம்பழத்தை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும், நெருப்பில் வாட்டி அதன் தோலை உரித்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து உண்ணலாம்.

மேலும் பனம்பழத்தின் தசைப்பகுதிகளை தனியாக ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் போன்றவற்றை சேர்த்து பணியாரம் சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Palm Fruit in Tamil

மேலும் படிக்க: நம்புங்க..! வெறும் 2 பொருட்களை வைத்து சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்யலாம்..!