ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!

0
154

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

அந்தக் கட்சி கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது, அதில் ஒரு முக்கியமான வாக்குறுதி என்னவென்றால் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதாகும். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற முடிவை முதன் முதலில் அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி, ஆனால் இதுவரையில் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு கட்சியும் அதனை செயல்படுத்த முன் வரவில்லை. இருந்தாலும் தற்சமயம் திமுக அரசு அதனை செய்து காட்டியிருக்கிறது இது பலர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.

இந்த நிலையில், முதன்முதலாக சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அந்த அறிக்கையில் பனை மரம் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும், பனை மரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கவேண்டும், பனைவெல்லம் போன்ற பொருட்களை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும், அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பணம் கன்றுகளை முழு மானியத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்ற ஒரு அரசாணையில் பொது விநியோகத் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் இருக்கின்ற ரேஷன் கடைகளில் பனைவெல்லம் வினியோகம் செய்யப்படும் அதன் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பனைவெல்லத்தை பேக்கிங், எம்ஆர்பி விலை அச்சிடுதல், பேக்கிங் தேதி காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலை கடைகளில் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரையில் பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம் பனைவெல்லத்தை விருப்பப்பட்ட பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம். பனைவெல்லத்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை, அப்படி ரேஷன் கடை பணியாளர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது நியாயவிலை கடைகளில் பனைவெல்லம் விநியோகம் செய்யப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்கள் உதவியுடன் மாவட்டம் மற்றும் தாலுகா மற்றும் கிராமங்களில் விளம்பரப் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅதை செய்ய நாங்கள் தயார்! மறைமுகமாக மாநில அரசை கேள்வி எழுப்பிய அண்ணாமலை!
Next articleஐபிஎல் போட்டி! கல்கத்தாவை ஓரங்கட்டியது பஞ்சாப் அணி!