PMK TVK: பாமகவின் சித்திரை முழு நிலா மாநாடானது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை புரிய கோரி ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது நடுவே உட்கட்சி மோதல் இருந்தபோதும் மாநாட்டிற்கான பணியானது தடைப்படவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட 12 வருடத்திற்கு பிறகு நடக்கும் மாநாடு. இதற்கு முன் நடத்தப்பட்ட மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால் தான் மேற்கொண்டு மாநாட்டிற்கு அனுமதி அளிக்காமல் இருந்தனர்.
ஆனால் தற்பொழுது மகாபலிபுரத்தில் வரும் மே மாதம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு அதன் தலைமையையும் ராமதாஸ், அன்புமணிக்கு கொடுத்துள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்படும் என்ற பேச்சு அடிபட்டுள்ளது. எந்த ஒரு கூட்டணி கட்சியுமின்றி நடுநிலையில் இருக்கும் விஜய்க்கு இது ஒரு பெரிய வாய்ப்பு என்றே கூறுகின்றனர்.
அஞ்சலையம்மாவை தனது கொள்கை தலைவர்களுடன் சேர்த்ததற்கு முக்கிய காரணம் பாமக வை டார்கெட் செய்யத்தானம். இந்த மாநாட்டிற்கு விஜய்- க்கு அழைப்பிதல் கொடுக்கப்பட்டால் கலந்து கொள்வாரா, மேற்கொண்டு கூட்டணி குறித்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படுமா என்றெல்லாம் வியூக அமைப்பாளர்கள் பேசி வருகின்றனர். பாமக சித்திர முழு நிலா மாநாட்டிற்கு விஜய் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.