உடல் சோர்வை நீக்கும் பனங்கற்கண்டு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது??
பனங்கற்கண்டு என்பது ஒரு வகை இனிப்பாகும். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த பனங்கற்கண்டை சாதாரணமாக சாப்பிட்டு வந்தால் உடலில் பல நன்மைகள் கிடைக்கின்றது.
இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் குணமடைகின்றது. இருமல், சளி, சுவாசப் பிரச்சனைகள் போன்ற பல உடல்நலக் கோளாறுகள் குணமடைகின்றது. பனங்கற்கண்டு முக்கியமாக இருமலுக்கு சிறப்பான மருந்தாக பயன்படுகிறது.
இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடல் சோர்வை நீங்கி புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பனங்கற்கண்டு
* பால்
* ஏலக்காய்
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக இதில் ஏலக்காயை தட்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு ஆற வைக்க வேண்டும். இளஞ்சூடாக ஆறிய பின்னர் இதை அப்படியே குடிக்கலாம். இவ்வாறு பனங்கற்கண்டை பயன்படுத்தினால் உடல் சோர்வு நீங்கி நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம்.