பருவ மழையை வரவேற்க சுத்தம் செய்யப்படும் நீர்நிலைகள்

Photo of author

By Anand

தென்காசி

பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் உள்ளாட்சிகளில் நடைபெற வேண்டிய பல்வேறு பணிகளும் நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, மாதங்களில் பருவ மழை பொழியும் காலம் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்ய ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் நீர்நிலையை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

இதனையடுத்து சரவண பொய்கை நீர்நிலை வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் திரு. கே.முரளி அவர்களின் உத்தரவின் பேரில் வடகரை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் முருகன் அவர்களின் மேற்பார்வையில் வடகரை பேரூராட்சி பணியாளர்கள் வடகரையில் அமைந்துள்ள சரவணப்பொய்கை உயர்நிலையை சுத்தம் செய்தனர்.