பீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா?
கொரோனா தொற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அதன் அடுத்த பாரிய மாற்றத்தை அடைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை கொடுத்து வருகிறது. கொரோனாவாக இருந்தது ஏ1 வைரஸ் ஆக மாற்றமடைந்தது. அவரை அடுத்து ஓமைக்ரானாக மீண்டும் அடுத்த வளர்ச்சியை அடைந்தது. இரண்டு வைரஸ்கள் கலந்து டோமைக்ரானக சில நாடுகளில் பரவி வந்தது. தற்பொழுது தான் மூன்றாவது அலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து கொரோனா பாதிப்பு குறைந்தது.
பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அமல்படுத்தினர். சமீபகாலமாக தொற்று பாதிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்தது. தற்பொழுது பண்டிகை ஆரம்பித்த காரணத்தினால் மக்கள் கூட்டம் அதிக அளவு கூடுகிறது. இதனால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு அடுத்ததாக தற்சமயத்தில் குஜராத்தில் XE தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எண்பத்தி எட்டு ஆயிரம் பெயருக்கு தொற்று பாதிப்பானது உறுதியாகி உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் இந்த குரலை தோற்றால் ஒரே நாளில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். முன்பு இருந்ததைக் காட்டிலும் உயிரிழப்புகள் குறைந்திருந்தாலும் ஆனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. ஒருபக்கம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 லட்சத்து 1332 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்பொழுது XE வகை குரலை தொற்றும் பரவ ஆரம்பித்துள்ளதால் மக்கள் சற்று அச்சத்துடனே காணப்படுகின்றனர்.