சருமத்தை காக்கும் பப்பாளி… இதனுடன் இந்த பொருள்களை பயன்படுத்தி பாருங்க…
பப்பாளிப் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். அதிக நன்மைகள் நிறைந்த பப்பாளி பழத்தை வேறு சில பொருள்களுடன் சேர்த்து சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பப்பாளிப் பழம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து நமது முகத்தை பொலிவாக வைக்க உதவுகின்றது. பப்பாளியில் சருமத்திற்கு தேவையான சத்துக்களான வைட்டமின், மினரல்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தை வேறு சில பொருள்களுடன் எவ்வாறு சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பப்பாளி மற்றும் தேன்…
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி மற்றும் தேன் கலந்து பயன்படுத்துவது ஒரு சிறந்த தீர்வை கொடுக்கும். தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக இருக்கும். மேலும் பப்பாளி விழுதானது சருமத்தின் துளைகளுக்குள் ஆழமாக சென்று சுத்தம் செய்கின்றது.
பப்பாளி தேன் ஃபேஸ் பேக் செய்யும் முறை…
பப்பாளி பழத்தின் விழுது கால் கப் எடுத்துக் கொண்டு தேன் அரைக் தேகரண்டி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை மூன்றையும் ஒரு பவுலில் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வந்தால் முகம் பிராகசமாக இருக்கும்.
பப்பாளி மற்றும் ஆரஞ்சு…
பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்தில் அதிக அளவில் எண்ணெய் சுரப்பது குறைந்து விடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை இது போக்கும்.
பப்பாளி மற்றும் ஆரஞ்சு ஃபேஸ்பேக் செய்யும் முறை…
ஒரு பவுலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்துக் கொண்டு அதில் மூன்று தேக்கரண்டி ஆரஞ்சு பழச் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழிந்து கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்வதால் முகத்தில் அதிகம் எண்ணெய் வருவது நிறுத்தப்படுகின்றது.