சிங்கம் போல நடந்து வர்ரான் செல்ல பேராண்டி’ என்ற பாடல் மூலம் மிகப்பெரும் புகழ் பெற்றவர் பரவை முனியம்மா. கிராமிய பாடல்கள், திரைப்பட பாடல்கள் என அவர் பாடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின
தூள் படத்தில் விக்ரமுடன் நடித்த பரவை முனியம்மாவுக்கு அதன் பின்னர் நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தார். இந்த நிலையில் 83 வயதான பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மாதம் ஒரு ரூபாய் 6000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்படி வழிவகை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் இந்த தொகை மருத்துவ செலவிற்கே போதாத நிலையில் அவர் தற்போது மிகவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் உள்ளார். இந்த நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல்நிலை குறித்த ஒரு சில வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவியது
ஆனால் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் பரவை முனியம்மாள் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாக அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதாகவும்
அறிக்கை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும் பரவை முனியம்மாவால் சரியாக பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பரவை முனியம்மாவின் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்கான செலவு அதிகமாக இருப்பதக அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து தமிழக அரசும் நடிகர் சங்கமும் சிகிச்சை செலவுக்கு உதவி செய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வரை நடிகர் சங்கமும் கண்டுகொள்ளவில்லை தமிழக அரசும் இது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை
இந்த நிலையில் பரவை முனியம்மா சிகிச்சை பெற்றுவரும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் பரவை முனியம்மாவின் சிகிச்சைகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும், அவரது உடல் நிலை முழுமையாக குணமடையும் வரை அவருக்கு உயர்தர சிகிச்சையை இலவசமாக அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நடிகர்சங்கமும், அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அவரது பாடல்களுக்கு ரசிகர்களான மருத்துவ நிர்வாகம் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது