தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parthipan K

Parcel services canceled for three consecutive days! Action order issued by the government!

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வியாழன் கிழமை அன்று  குடியரசு தின விழா  கொண்டாடப்படுகிறது.அதனால் அனைத்து இடங்களிலும்  பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 ஆம் தேதிக்கு முன்பாக விமான நிலையங்கள்,ரயில்நிலையங்கள்,கோவில்கள் என முக்கிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகள் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஜனவரி 26 தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே துறை உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் செய்தித்தாள்கள், இதழ்கள் எடுத்து செல்லும் பார்சல் சேவைக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.