பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

Photo of author

By Parthipan K

பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவிலில் திருமணமான இளம்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இருவரும் ஈரியூர் காட்டுக்கொட்டாய் வனப்பகுதியில் நேற்று இரவு திருமணம் செய்துகொண்டு அதன்பிறகு அங்கு இருக்கும் கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து கீழ்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.