பெற்றோர்களே எச்சரிக்கை! தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்!

0
220

பெற்றோர்களே எச்சரிக்கை! தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு! அமைச்சரின் பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடியில்,குழந்தைகளின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது.அதில் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் 45 ஆயிரம் குழந்தைகள் இருதய ஓட்டை மற்றும் காதுகேளாண்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இருதய பிரச்சனை காது கேளாண்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை,கடுமையான பாதிப்பு மற்றும் நடுத்தர பாதிப்பு என இரண்டு வகைகளாக பிரித்து அவர்களுக்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleமாணவியின் காதலை மறைக்க ஆசிரியர் மீது பொய் பாலியல் வாக்குமூலம்! மாணவியின் கேடுகெட்ட செயல் அம்பலம்!!
Next articleமக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here