பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்!

Photo of author

By Kowsalya

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் எலி மருந்தை பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து 5 சிறுமிகள் பல் துலக்கி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழியை அடுத்து கட்டாலங்குளம் கிராமத்தை சார்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள்கள் ஆர்த்தி மற்றும் கீர்த்தி.

இதே பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மகள் சுபிக்ஷா. உடையப்பன் என்பவரின் மகள் முத்துபாண்டீஸ்வரி , ராமதாஸ் என்பவரின் மகள் அங்காள ஈஸ்வரி.
இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகில் உள்ள நிலையில் அனைவரும் ஒரே இடத்தில் விளையாடிக் கொண்டிருந்து இருக்கின்றனர்.
அப்பொழுது அருகே கிடந்த உள்ள எலி மருந்தை பேஸ்ட் என  அதனை எடுத்த சிறுமிகள் பல் துலக்கி உள்ளனர்.
உடனே அனைவரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

இவர்களைக் கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் தகவலறிந்த போலீஸார் இந்த விஷயம் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் சிறுவர்களுக்கு எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட கூடாது? எது விஷம்? என்பதை அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.