பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!!

0
297
#image_title

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!!

மும்பையில் இளம்பெண் ஒருவரை ஒருவர் அவருடைய பெற்றோர்கள் பானை ஒன்றை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் பல வகையான வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதாவது தோஷம் நீங்க வாழை மரத்துடன் திருமணம், மழை பெய்வதற்காக கழுதையுடன் திருமணம், நாயுடன் திருமணம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் மும்பையில் தற்பொழுது வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது இளம் பெண் ஒருவரை அவருடைய பெற்றோர்கள் மண்ணால் ஆன பானை ஒன்றை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மும்பையில் இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணி புரிந்து வருகிறார். இந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில்அந்த பெண்ணை மண்ணால் ஆன பானையை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திறுள்ளனர்.

இது குறித்து அந்த பெண் “நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில் நான் திருமணம் செய்யப் போகும் ஆண் விரைவில் மரணம் அடையாமல் இருக்க நான் மண்ணால் செய்யப்பட்ட பானையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய பெற்றவர்கள் என்னை வற்புறுத்துகின்றனர். என்னுடைய தாய் மற்றும் தந்தை இருவரும் படித்தவர்கள். படித்த பெற்றோர் இது போன்று முட்டாள் தனமாக இருப்பது கவலையை அளிக்கின்றது” என்று கூறினார்.

Previous articleமூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!!
Next articleபவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!!