Breaking News, District News, State

பெற்றோரை கவனிக்காத வாரிசுகளின் பெயரில் சொத்தை முன்பே எழுதி வைத்திருந்தாலும் அவை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றோருக்கு உண்டு! சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Photo of author

By Sakthi

பெற்றோரை கவனிக்காத வாரிசுகளின் பெயரில் சொத்தை முன்பே எழுதி வைத்திருந்தாலும் அவை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றோருக்கு உண்டு! சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Sakthi

Button

சமுதாயம் என்பது தன்னுடைய பொது பண்புகளை வேகமாக எழுந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதாவது சென்னையைச் சார்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தன்னுடைய சொத்து அனைத்தையும் மூத்த மகனின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சித்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பெற்றோர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரணை செய்தார்.

நகைகளை விட்டும் சேமிப்புகளை கரைத்தும் தங்களுடைய மருத்துவச் செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என்று விமர்சனம் செய்த நீதிபதி, கடந்த 2007 ஆம் வருடம் கொண்டுவரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்புச் சட்டப்படி கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்வதற்கு பெற்றோருக்கு உரிமையுள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது! மீறினால் 3 ஆண்டு சிறை!

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து!

Leave a Comment