இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது! மீறினால் 3 ஆண்டு சிறை!

0
106

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு இலட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதற்காக தொடர் வண்டியில் பயணம் செய்வார்கள்.

அப்படி செல்லும்போது மக்கள் தங்களுடைய உடைமைகளுடன் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதாக தீப்பற்றக்கூடிய தன்மை இருக்கிறது என்பதால், தீ பிடித்து விபத்துக்கள் உண்டாகாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்வண்டியில் பயணம் செய்யும் போது எளிதில் தீ பிடிக்கக்கூடிய சிகரெட், தீப்பெட்டி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பிடிக்க கூடிய மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சொல்லப்படுகிறது.

பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்களுக்கு ரயில்வே சட்டம் 1989ன் படி மூன்று வருடங்கள் வரையில் சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் வரையில் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெற்கு ரயில்வேயின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்வண்டியில் யாராவது பட்டாசுகளை எடுத்துச் செல்வதை கண்டால் ரயில்வே ஹெல்ப் லைன் 139 க்கு தகவல் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.