அரியலூர் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்!..
அரியலூர் மாவட்டத்தையடுத்த முனியன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவர். இவருடைய மனைவி பாப்பாத்தி வயது 65. இவர் ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர்.இவர்களது மகன் கணேசன் வயது 40 இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தன் லாரிகளை இயக்கி வந்தார்.
அவரது மனைவி ராஜேஸ்வரி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று மன்றத் தலைவி எனும் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.வயிற்று வலியை தாங்க முடியாமல் ராஜேஸ்வரி நேற்று மாலை தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரெட்டிபாளையம் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி இறந்ததால் அங்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கணேசனின் தாய் பாப்பாத்தி வெற்றி பெற்று தற்போது தலைவராக இருந்து உள்ளார்.
மனைவி இறந்த மனவேதனையில் கணேசன் நள்ளிரவு மனைவி இருந்த அதே வீட்டில் மாட்டு கொட்டையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி இறந்த சோகத்தில் ரெட்டிப்பாளையம் ஊராட்சி தலைவியின் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.