இன்னும் இரண்டு தினங்களில் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்! இந்தியாவில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா? 

Photo of author

By Rupa

இன்னும் இரண்டு தினங்களில் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்! இந்தியாவில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?
இன்னும் இரண்டு தினங்களில் பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து வெறும் 117 பேர் மட்டும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரத்தில் வரும் ஜூலை 26ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது. பாரிஸ்ஸில் மூன்றாவது முறையாக நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டி அந்நகரத்தில் உள்ள ஜார்டின்ஸ் டு ட்ரொக்கெடரோ ஸ்டேடியத்தில் தொடக்க நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்படவுள்ளது.
பாரிஸ் நகரில் தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகள் பங்கேற்கின்றது. மேலும் 206 நாடுகளில் இருந்து 10714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் வீரர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது இந்தியாவில் மொத்தம் 141.72 கோடி மக்கள் தொகை உள்ளது. இந்த மக்கள் தொகையில் வெறும் 117 பேர் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். ஆனால் 4.78 கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயின் நாட்டில் 382 பேர் பாரிஸ் நாட்டின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இதையடுத்து அனைவரும் ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தயார் செய்வதில் அரசு சிறிது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் இந்தியாவில் கிரிக்கெட்டுக்குதான் அதிக ரசிகர்களும் அதிக கவனிப்பும் இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.