மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இயக்குனர்!

Photo of author

By CineDesk

மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு உலகின் பல நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரே படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படத்தை தனுஷை வைத்து இயக்க இருக்கிறார். கர்ணன் என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் யாவும் முடிவடைந்து தற்போது படப்பிடிப்பிற்கு தயாராக உள்ளது

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வரும் ‘சுருளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த உடன் அவர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள ;கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி முடித்த உடன் இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் பா ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது