நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ஆம் தேதி தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்!

0
179

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ஆம் தேதி தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடரை நடத்த நாடாளுமன்ற விவாகரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு பரிசீலித்து வருகிறது. சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் குளிர் கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடத்தப்படும் என கூறப்பட்டது.

ஆனால் கட்டிடப்பணிகள் நிறைவடையாததால் இந்த ஆண்டு பழைய கட்டிடத்திலேயே கூட்டுத்தொடரை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமையாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு உள்ளதால் இந்த கூட்ட தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக குளிர்கால கூட்டத்துடன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்துடன் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டு தொடர் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ளது.

Previous articleகொட்டி தீர்க்கும் கனமழை: 2-வது நாளாக தத்தளிக்கும் மக்கள்! மழை நீரில் மிதக்கும் சிதம்பரம்!
Next articleமோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!