வருகிறது பாராளுமன்ற தேர்தல் வந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்!
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதை ஒட்டி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட் மற்றும் யாருக்கு நாம் வாக்களிக்கிறோம் என்பதை வாக்காளர்கள் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் விவி பேட் ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்தால் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட்டுகள் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து ஆயிரம் டிவி பேட் இயந்திரங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை இரண்டு கண்டெய்னர்கள் மூலமாக கொண்டு வரப்பட்டது.
இதனை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரப்பட்ட கன்டெய்னர் லாரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கக்கூடிய பாதுகாப்பு கட்டிடத்தில் உள்ள அறையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயந்திரங்களை பொறியாளர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.