இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!!

Photo of author

By Jeevitha

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!!

இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மௌனம் சாதிப்பது, வணிகம், ஒரே மாதிரியான சிவில் சட்டம் இன்னும் பல விவகாரங்களை பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளார்கள். அதனையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை எதிர் கட்சிகள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தை திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடத்தியது.   இதனையடுத்து  மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

மேலும் மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவோம் என்றும் கூறியிருந்தார். அதனையடுத்து விலைவாசி உயர்வு மற்றும் அதானி விவகாரங்கள் போன்ற பிரச்சனை குற்றி விவாதம் செய்ய உள்ளார்கள்.  மேலும் இந்த கூட்டத்தில் பல மசோதாகள் நிறைவேற்ற ஆளும் கட்சிகள் திட்டமிட்டுள்ள்ளது.