நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!! கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள்!! 

Photo of author

By Jeevitha

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!! கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள்!!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20  ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த தகவலை ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார்.

மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளதுள்ளார்.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மௌனம் சாதிப்பது, வணிகம், ஒரே மாதிரியான சிவில் சட்டம் இன்னும் பல விவகாரங்களை பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று ஏதிர்பார்க்கபடுகிறது.

அதனையடுத்து அனைத்து கட்சி கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர் கட்சிகள் அறிவித்திருந்தது. மேலும் மற்ற மாநிலங்களுக்கும் எம்பிகள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த நிலையில் தமிழக அரசு  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும்  ஜூலை 14 ஆம் தேதி நடத்தியது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து எம்.பி., க்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் முக்கியமாக கவர்னர் ஆர்.என்.ரவி பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இந்த கூடத்தில் அனைத்து மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவோம் என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து விலைவாசி உயர்வு மற்றும் அதானி விவகாரங்கள் போன்ற பிரச்சனை குற்றி விவாதம் செய்ய உள்ளார்கள்.