மீண்டும் பார்த்திபன்-கார்த்திக் கூட்டணி!! அடுத்த மெஹா ஹிட் படம் ரெடி!!

0
175

செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் மற்றும் பார்த்திபன் கூட்டணி ஆனது மீண்டும் கூட்டு  சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள படமான ‘ஐயப்பனும் கோஷியும்’  என்ற சூப்பர் ஹிட் கொடுத்த படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார்.

இந்த படத்தில் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்க போவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் வெளியான நிலையில், ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக் கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு  வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Previous article“அரியர் தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மட்டும் சொம்பயா?” என்ற பாணியில் ஸ்டாலின் விமர்சனம்
Next articleதமிழகத்தில் செப்டம்பர் வரை நீடிக்கும்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!