“என் படத்த ஹாலிவுட்ல ரீமேக் செய்யப்போறேன்…” நடிகர் பார்த்திபன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

0
253

“என் படத்த ஹாலிவுட்ல ரீமேக் செய்யப்போறேன்…” நடிகர் பார்த்திபன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதற்காக இந்தப் படம் ஆசிய சாதனை புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று வரவேற்பை பெற்று, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில், இரண்டு தேசிய விருதுகளை இந்த படம் வென்றுள்ளது. இந்திய அரசின் தேசிய விருதுகள் போட்டியிலும் நடுவர்களின் சிறப்புப் பரிசை பெற்றது.

படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கும் இந்த படத்தை பார்த்திபனே இயக்கி வருகிறார். இதற்கிடையில் பார்த்திபன் இயக்கியுள்ள மற்றொரு வித்தியாசமான படைப்பான இரவின் நிழல் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்து எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Previous articleதெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  நேரம் மாற்றம்!
Next articleசி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!