ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம்!

0
102

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம்!

இரவின் நிழல் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதில் தாமதமாகி வந்த நிலையில் இப்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்து வருபவர். கடைசியாக அவர் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ அவர் மட்டுமே நடித்த படம். இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இப்போது இரவின் நிழல் என்ற படத்தை  உருவாக்கி ரிலீஸ் செய்தார். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான்லீனியர் பாணியில் அமைந்த திரைக்கதையை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளனர். உலகிலேயே இந்த வகையில் அமைந்த முதல் திரைப்படம் இதுதான் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஜூலை மாதம் ரிலீஸான இந்த திரைப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் விரைவாகவே திரையரங்கில் இருந்து தூக்கப்பட்ட இந்த படம் ஓடிடியில் வெளியாகவில்லை. இது சம்மந்தமாக படத்தைத் திரையரங்கில் தவறவிட்டவர்கள் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இப்போது அதுகுறித்து பார்த்திபன் தனது முகநூல் பக்கம் மூலமாக அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில் “இன்றோ நாளையோ இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும். அதற்காக நானும் காத்திருக்கிறேன். உங்களின் ஆர்வத்துக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.