மக்களவை தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்!! ஆளும் கட்சி கூட்டம் டெல்லியில் எதிர் கட்சி கூட்டம் பெங்களூரில் சூடுப்பிடிக்கும் அரசியல் களம்!!
மக்களவைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேசிய கட்சிகள் அனைத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மேலும் அவர்களின் கூட்டணிகளை சேர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் எதிர்காட்சிகள் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று வரை நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்றே பெங்களூர் சென்றார். மேலும் இந்த கூட்டத்தில் 38 கட்சிகளில் கலந்து கொண்டு உள்ளது. அதனை தொடர்ந்து பாஜக கூட்டணிகளை ஆட்சியில் இருந்து கலைக்க எதிர் காட்சிகள் திட்டம் வகுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது டெல்லியில் ஆளும் கட்சியான பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் ஆளும் கட்சி தனது கூட்டணியை பலத்தை வெளிபடுத்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 4 கட்சிகள் கலந்து கொண்டது. தமிழ் நாட்டிலிருந்து ஆளும் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார். இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் புதிய தமிழக கட்சிகள் பங்கேற்றது.