ஒழுக்கம் இல்லாத கட்சி காங்கிரஸ்! அதனால் தான் பாஜகவில் இணைகிறேன்!

ஒழுக்கம் இல்லாத கட்சி காங்கிரஸ்! அதனால் தான் பாஜகவில் இணைகிறேன்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் மாவட்ட துணை தலைவருமான எம்.ஜி. ராஜா , அக்கட்சியிலிருந்து விலகி பாஜக கட்சி தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். இந்த திடீர் இணைப்பு குறித்து எம்.ஜி. ராஜா கூறுகையில், நான் கடந்த 1977 ம் ஆண்டு முதல் மாணவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து, 1989 ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ்  நிர்வாகியாக பணிபுரிந்தேன்.

1993 ம் ஆண்டு காங்கிரஸ் காரிய கமிட்டி மாவட்ட துணை தலைவராக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் தனி மனித ஒழுக்கம், தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. தொண்டர்களை மதிக்கும் கட்சி பாஜக. தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர்களை  கொண்ட கட்சி பாஜக தான். ஆகவே, மன நிறைவோடு பாஜக கட்சியில் இணைந்துள்ளேன் என்றார். உடன், மாவட்ட பொது செயலாளர் பாலு, வடக்கு ஒன்றிய தலைவர் சரவணக்குமார்,  பாஜக நகர தலைவர் முத்து பாண்டி, ஒன்றிய,  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment