இந்த ஆளு பெயர் கூட இனி இருக்க கூடாது.. திமுக அமைச்சரை அடியோடு விரட்டும் தலைமை!!

0
17
Party leadership sidelined minister Ponmudi
Party leadership sidelined minister Ponmudi

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை திமுக கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் மூத்த நிர்வாகியும் மற்றும் வனத்துறை அமைச்சுருமாக இருந்த பொன்முடியை பதவியிலிருந்து நீக்கம் செய்தது. இதற்கு முக்கிய காரணம் அவரது வாய் பேச்சு தான். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் வந்ததுலிருந்து தற்போது வரை பொதுமக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விதமாக பேசி மாட்டிக்கொள்கிறார்.

அந்த வகையில் முதலில், பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கேட்டார். அச்சமயமே தலைமைக்கு இது அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் தொகுதி ரீதியாக கோரிக்கை வைத்தால் நீங்கள் எல்லாம் எனக்கா ஓட்டு போட்டீர்கள் என்று ஒருமையில் பேச ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து பெண்களை ஒருமையில் பேசுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இதனால் தலைமைக்கு பெருமளவு நெருக்கடி வந்ததால் உயர் கல்வித் துறை அமைச்சர் பதவியிலிருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார். அப்படி இருந்தும் தொடர்ந்து சைவ வைணவ இனத்தை வைத்து பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. ஆளும் கட்சிக்குள்ளேயே பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு இவர் பதவியும் பறிக்க கோரி கோரிக்கை விடுத்தனர்.

கட்சி தலைமை அதனை ஏற்று பொன்முடியின் பதவியை பறித்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில்இவருக்கு இருந்த மரியாதை தற்பொழுது குறைந்துள்ளது. அங்கு நடைபெற்ற செயற்குழு கூட்டம் பேனர்களில் இவரது படம் பெயர் என ஏதும் காணப்படவில்லை. இதிலிருந்து அவரை திமுக கட்சி புறக்கணிக்கிறது என்பதை காண முடிகிறது.

Previous articleED ரெய்டு வேண்டாம் “விட்டுடுங்க”.. மோடியிடம் சென்ற ஸ்டாலின்!! திமுக குட்டை உடைத்த சீமான்!!
Next article10 நோய்களை அசால்ட்டாக குணப்படுத்தும் மாதுளை இலை!! விரைவில் ரிசல்ட் கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க!!