பார்வதி காட்சிகள் முடிந்தது!! விக்ரம் படம் பற்றி வெளிவந்த புதிய தகவல் !!

Photo of author

By Jeevitha

பார்வதி காட்சிகள் முடிந்தது!! விக்ரம் படம் பற்றி வெளிவந்த புதிய தகவல் !!

Jeevitha

Parvati scenes are over!! New information about Vikram movie !!

பார்வதி காட்சிகள் முடிந்தது!! விக்ரம் படம் பற்றி வெளிவந்த புதிய தகவல் !!

இயக்குநர் பா.ரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் விக்ரம் ஹிரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கர்நாடக மாநிலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பூ பட நாயகி பார்வதி நடித்துள்ளார். இந்த படத்திற்காக  உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த படத்தின் மற்றொரு கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் .  மேலும் இந்த படம் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும்  துயரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

ஏற்கனவே இந்த படத்தின் பிரமாண்டமான மேக்கிங் வீடியோவை படக்குழு விக்ரம் பிறந்த நாளில் வெளியிட்டது. இந்த வீடியோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய  விக்ரமிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக இவர் சில மாதங்கள் படபிடிப்பிற்கு  வரவில்லை. இந்நிலையில் அந்த படத்தில் நடிக்கும் பார்வதி காட்சி முடிவடைந்தது என்று படக்குழு தெரிவித்துள்ளது.