அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்!!
கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் மொத்தம், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வெழுதினர்.
மாணவியர்களின் எண்ணிக்கை : 4 லட்சத்து 21ஆயிரத்து 13
மாணவர்களின் எண்ணிக்கை : 3 லட்சத்து 82 ஆயிரத்து 371
தேர்ச்சி விவரங்கள் :
மொத்தம் தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7,55,451 (94.03%)
மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
கடந்த மே 2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,06,277 பேர் ஆகும். தேர்ச்சிச் சதவிகிதம் 93.76% (சதவீதம்)ஆகும்.
இந்த முறை அரசுப்பள்ளி மாணவர்கள் 89.80 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் 95 99% சதவீதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 99.08% சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.