தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்!
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் நோக்கி பயணிகளின் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை தாண்டி தர்மபுரிக்கு சென்றபோது வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் கற்கள் பெயர்ந்து ரயில் சக்கரத்திலேயே சிக்கி உள்ளது.
அதன் காரணமாக ரயில் பாதையில் இருந்து லேசாக தடம் புரண்டது. அதை தொடர்ந்து என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதாக தெரிவித்தனர். ரயில் தடம் புரண்டதில் நல்லவேளையாக பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து ரயிலில் வந்த 1250 பயணிகளும் பேருந்தில் ஏற்றப்பட்டு, அதன் பின் தர்மபுரி ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.