நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! 

0
98
#image_title
நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!!
நாளை முதல் அதாவது அக்டோபர் 14ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து வரவழைக்கப்பட்ட செரியபாணி என்ற கப்பல் மூலமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதாவது நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாளை(அக்டோபர்14) முதல் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
இந்த கப்பல் போக்குவரத்திற்காக கேரள மாநிலம் கொச்சினில் இருந்து கடந்த 7ம் தேதி செரியபாணி என்ற பெயர் கொண்ட கப்பல் நாகை துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதையடுத்து  செரியபாணி கப்பலுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி கடந்த 8ம் தேதி இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு தமிழகத்தில் இருந்து சென்ற செரியபாணி கப்பல் மீண்டும் அங்கிருந்து தமிழகம் நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
தமிழகம் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணம் செய்ய ஜி.எஸ்.டி வரி 18 சதவீதத்துடன் பயணக் கட்டணம் 6500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கப்பலில் 50 கிலோ  வரையில் பயணிகள் தங்கள் உடைமைகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக எடுத்துச் செல்லலாம். இதில் பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் ஈ விசா தேவை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
சில நிர்வாக காரணங்கள் காரணமாக இந்தியா(தமிழகம்-நாகை), இலங்கை(காங்கேசன்) இடையேயான கப்பல் போக்குவரத்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்பொழுது மீண்டும் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
இந்த கப்பல் பயணத்தை முன்னிட்டு பயணிகள் முனையத்தில் சோதனை செய்யும் கருவிகள், குடியுரிமை, சுங்கத்துறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது. மேலும் முதல் நாள் சிறப்பு கட்டணமாக கப்பல் போக்குவரத்து பயணத்திற்கு 3000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை(அக்டோபர்14) முதல் தொடங்கப்படவுள்ள கப்பல் போக்குவரத்தில் முதல் நாளில் பயணம் செய்வதற்கு 35 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
Previous articleரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! 
Next articleதென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!!