ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ஆம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த வழியே சென்ற பேருந்து, லாரி மற்றும் நான்கு கார்கள் சிக்கிக் கொண்டன. அந்த நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் சிக்கியதை தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் மீண்டும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் கூட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நைனிடால் பகுதியில் மலைப்பாதையின் சாலையில் பேருந்து ஒன்று 14 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
அப்போது திடீரென மலைப்பகுதியிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டு, நிலம் பெயர்ந்து சாலையில் வந்து விழுந்துள்ளது. இதை கவனித்த பேருந்து ஓட்டுனர் உஷாராக முன்பே வண்டியை நிறுத்தி விட்டார். மேலும் நிலச்சரிவை கண்ட பயணிகளில் இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியே வெளியே குதித்தும், சிலர் வாசல் வழியே வெளியேறியும் தப்பி ஓடினார்கள். இதன் பின்பு பேருந்தை பின்னோக்கி சாதுரியமாக பேருந்தை இயக்கி, பாதுகாப்பான பகுதிக்கு பேருந்தை எடுத்து சென்றனர்.
நினைத்து பாருங்கள் ஒரு சில நிமிடங்கள் முன்னே சென்று இருந்தால் பேருந்து விபத்தில் சிக்கி பெருமளவு சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் பேருந்து ஓட்டுனரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். இது பற்றிய வீடியோ வெளிவந்து இணையதளங்களில் வைரலாக பரப்பப்படுகிறது.
#WATCH | Uttarakhand: A bus carrying 14 passengers narrowly escaped a landslide in Nainital on Friday. No casualties have been reported. pic.twitter.com/eyj1pBQmNw
— ANI (@ANI) August 21, 2021